IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமைதிக்கான நோபல் பெற்ற பெண்ணை அலற விட்ட ட்ரம்ப்!

17


ஈராக்கை சேர்ந்த நாடியா முராத் என்ற பெண் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு கொடுத்தார்கள் என்று கேள்வி கேட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.


ஈராக்கை சேர்ந்த நாடியா முராத் என்பவர் சமூக ஆர்வலர். இவர் போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். 2014ம் ஆண்டு ஈராக் மற்றும் சிரியாவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கி அப்போது யாசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக்கி கொண்டனர்.


ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் சிக்கிய நாடிய மூன்று மாதங்களுக்கு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவரது தாயாயரும் ஆறு சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டனர். பின்பு அங்கிருந்து ஐ.நா.முகாமிற்கு வந்து சேர்ந்தார். பின்பு யாசிதி பெண்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டார். இவருடைய நற்பண்புகளை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்பட்டது.


அமெரிக்க அரசு நிகழ்ச்சி பங்கேற் சென்றார் நாடியா முராத். அப்போது அதிபர் டிரம்பிடம் ஈராக்கில் 3000 பெண்கள் காணாமல் போனது பற்றியும் தனக்கு நேர்ந்த கொடுமைபற்றியும் எடுத்துரைத்தார். இதைக் கேட்ட டிரம்ப், எதற்கு நோபல் பெரிசு கொடுத்தனர் என்று வினவினார்.


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நாடியா , இது ஒரு குடும்ப பிரச்சனை அல்ல, பல்லாயிரக்கணக்கான பெண்களின் பிரச்சனை , தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் , என கேட்டுக் கொண்டார்.


நோபல் பரிசு பெறுவது மிகப்பெரிய சாதனை, நாடியா முராத்திற்கு எதற்கு வழங்கப்பட்டது கூட தெரியாமல் அமெரிக்க அதிபர் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.