IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை வெறுக்குறீங்க? மல்லையா கேள்விக்கு பதில் சொல்லுங்க மக்களே!!

19


ஒரு காலத்துல கிங்பிஷர் கிங்காக வலம் வந்த மல்லையா சமூக ஊடகங்களால் இப்போது திருடன் என்று வர்ணிக்கப்பட்டு வருகிறார். ஆனா மனுஷன் இப்பவும் கிங் போலதான் இருக்கிறார் என்பது தனி கதை. கிங் பிஷர் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் மதுபான ஆலைனு தொழிலில் ஒஹோவென கொடிகட்டி பறந்தவர்தான் இந்த விஜய் மல்லையா.


எஸ்.பி.ஐ. வங்கியில் 9000 கோடி கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்த முடியாமல் 2016-ல், லண்டன் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த பல்வேறுகட்ட முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்காக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் விஜய் மல்லையா ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கு கமெண்ட் செய்த பலர் விஜய் மல்லையாவை திருடன் என திட்டியுள்ளனர்.


சமூக ஊடங்களில் தன்னை திருடன் என்று சொன்னவர்களுக்கு மல்லையா கொஞ்சம் காரமாகவே பதில் அளித்துள்ளார். எல்லோரும் என்னை திருடன் எனச் சொல்லி வெறுக்கும் அளவுக்கு அப்படி என்ன நான் தவறு செய்து விட்டேன்?.


வாங்கிய கடனை 100 சதவீதம் திரும்ப செலுத்த நான் தயாராக இருக்கிறேன். இதை நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஆனால் வங்கிகள் பணத்தை திரும்ப வாங்க மறுக்கினறன. அப்படியிருக்கையில் நான் எப்படி திருடனாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மல்லையாவின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி சோஷியல் மீடியாக்களை திணறடித்து வருகிறது.