IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

என்னைப் பார்த்தா விவிஐபி மாதிரி தெரியலயா? ஆதங்கப்படுகிறார் வரிச்சூர் செல்வம்!

18


மதுரையை கலக்கிலய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசித்து வந்துள்ளார். ஆனால் அவர் சாதாரண பக்தர்களை போல தரிசிக்காமல் விவிஐபி பாசில் தரிசித்து வந்துள்ளார்.


இவருடைய இந்த தரிசனத்திற்கு சமூக வலைதளங்களில் இவருக்கு எப்படி விவிஐபி பாஸ் கிடைத்தது என பலரும் பலவகை கேள்விகள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் நானும் விவிஐபி தானே என ஆதங்கப்பட்டுள்ளார்.


அத்திவரதர் தரிசனத்திற்கு பிறகு வரிச்சூர் செல்வத்தை அனைவருமே விமர்சிக்கும்படி பேசப்பட்டுள்ளார். இந்த விமர்சனத்திற்கு நான் தூரத்திலிருந்தே அத்திவரதரை தரிசித்திருப்பேன் என செல்வம் தெரிவித்திருக்கிறார்.


நானும் விவிஐபி தான். நான் போட்டிருக்கும் நகை 250 பவுன் போட்டிருக்கிறேன். நான் வைத்திருக்கும் ஒருகாரின் விலையை 1கோடி. அது மட்டுமல்லாமல் என்னிடம் விலை உயர்ந்த 7 மாடல் கார்கள் உள்ளன. அப்படியென்றால் நானும் விவிஐபி தான் என்கிறார் செல்வம்.


தனக்கு மிகவும் பிடித்தவர் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா தான் தன்னுடைய ரோல் மாடல் என்றும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். ஏனென்றால் அவர் கடன்வாங்கி சிறிதும் கலங்காமல் வாழ்க்கையை மிகவும் சந்தேஷமாகவும் என்ஜாய் பண்ணி வாழ்கிறார் என்று தன்னுடைய ரோல்மாடலை விளக்குகிறார் செல்வம்.


நான் அக்னிபார்வை பத்திரிக்கையில் இணை எடிட்டராக பணிபுரிகிறேன். எல்லோரும் என்னைப்பற்றி தவறாக எழுதும் போது நானும் , ஏதாவது எல்லோரைப்பற்றியும் எழுத வேண்டும் என்பதற்காகவே பத்திரிக்கையாளர் பணியை தொடர்கிறேன் என்கிறார். என்மீது 3 வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால் போலீஸ் போட்டது 30 வழக்குகள்.


தாதா கெட்டப்பில் கோயிலுக்கு வந்த வரிச்சூர் செல்வத்திற்கு இரண்டு மகள்கள். நான் தினமும் காலை சினிமாவிற்கு சென்றிடுவேன். சினிமா தான் என்னுடைய பொழுதுபோக்கு. வாரத்தில் வெள்ளி , சனி , ஞாயிறு என 3 நாட்கள் பப்புகளில் மட்டும்தான் இருப்பேன் . சென்னை மற்றும் பெங்களூர் பப்புகளுக்கு சென்றிடுவேன்.


மற்ற நாட்கள் என்னுடைய பேரக்குழந்தைகளுடன் தினமும் வாக்கிங் போவதே என்னுடைய தினசரி வாழக்கையாகும் என்றார். நான் வாழக்கையை என்ஜாய் பண்ணி வாழத்தொடங்கியுள்ளேன். ஏனெனில் நான் தாதா இல்லை, தாத்தா என்கிறார் செல்வம்.


சமீபத்தில் செல்வத்தின் பிறந்த நாள் மிகவும் சிறப்பாக மதுரையை குலுங்கும் அளவிற்கு கொண்டாடியதற்கு , தங்கள் குடும்பத்தில் யாரும் 50 வயதிற்கு மேல் இருந்ததில்லை. எனவே என்னுடைய 50வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக 4ஆயிரம் பெண்களுக்கு சேலை எடுத்து கொடுத்தேன் .


என்னுடைய மகள்களுக்கு இரண்டு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் யாருக்கும் சாப்பாடு போடவில்லை. எனவே 100 கெடா வெட்டி சாப்பாடு போட்டேன். என் பிறந்தநாள் விழாவிற்கு மட்டும் 30000 பேர் வந்துள்ளனர். அவர்களை மகிழ்விப்பதற்காகவே வெளிநாடுகளிலிலிருந்து 4 அழகிகளை வரவழைத்து பெல்லி டான்ஸ் ஆடவைத்தேன் என்கிறார் செல்வம்.