திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. நடராஜன், மாணிக்கவாசகர், சிவகாமி தாயருக்கு மா,பலா,வாழை படைக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. மேலும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டது.
பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சங்கர நாராயணபட்டர் முன்னின்று நடத்தினார். கோவில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.