Menu

தஞ்சை பெரிய கோயில் சிலையுடன் சல்லாபம் – மதுரை வாலிபர் சிக்கினார்


தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வைரலாக பரவியது. இதனை பலரும் கண்டித்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.


இதையடுத்து, அந்த சல்லாப படம் குறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான், சமீபத்தில் தஞ்சாவூர் சென்றபோது சிலைகளுடன் சல்லாபிப்பது போன்ற அநாகரிகமாக படம் எடுத்து பரப்பியுள்ளார். தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Facebook Comments