IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக்கு கிடைத்த கவுரவம்! மதுரை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!!

36

மதுரையில் திருநங்கையர் ஆவண மையம் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மாற்றுப்பாலின மக்களை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கி கவுரக்கப்பட உள்ளது.


இதுபற்றி திருநங்கையர் ஆவண மையம் நிறுவனர் திருநங்கை பிரியாபாபு, செயலாளார் மகாலட்சிமி ராகவன் ஆகியோர் கூறுகையில், ஆண்/பெண் என இரு பாலினம் மட்டுமே சொல்லி கொடுத்த நம் கல்வி முறையில், சமூக அக்கறையோடும் முற்போக்கு சிந்தனையோடும் திருநங்கையர் உள்ளிட்ட மாற்றுப்பாலின மக்கள் குறித்த புரிதல்களை நாங்கள் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம்.


எங்களது முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்த தலைமுறை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலமாக பல மாணவர்கள் மாற்றுப்பாலின மக்களை புரிந்து கொள்ளவும், தங்கள் விருப்ப பாடமாக தேர்வு செய்யவும், களப்பணி மற்றும் ஆய்வு படிப்பினை மேற் கொள்ளவும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்களை போற்றும் நிகழ்வாக இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மதுரை லேடி டோக் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது.


இந்தியாவில் முதன்முறையாக திருநங்கையர் ஆவண மையம் முன்னெடுத்துச் செய்யும் இந்த விழாவில் மதுரை செளராஷ்டிரா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முதுமுனைவர் இரா.சித்ரா, லேடி டோக் கல்லூரி, பெண் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியர் அன் நிர்மலா கார், ஆலோசகர் புயூலா ஜே.எம்.ராஜ்குமார், தி அமெரிக்கன் கல்லூரி சமூக பணித்துறை தலைவர் அகஸ்ட் ஜீலியன் லேஸ்மி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முன்னாள் சமூக பணித்துறை தலைவர் ஆர். சங்கர் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது, என்றனர்.