Menu

சம்மர் ஸ்பெஷல் – கோடை வெயிலை சமாளிக்க பெண்களுக்கான ஆடைகள்!


கோடை வெயிலை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஆடையில் கவனம் செலுத்துவது. சரியான ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக இருப்பது போல உணர முடியும். கோடைகாலத்தில் ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.


அடர் நிறங்களைவிட, வெளிர் நிற ஆடைகள்தான் கோடைக்கு ஏற்றவை. அடர் நிறங்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. வெப்பத்தை உள்ளிழுப்பதால் அவை நம் உடலில் கசகசப்பை உருவாக்குகின்றன.


இதனால் உடலின் வெப்பம் அதிகரித்துக் களைப்படைகிறோம். இதற்கு மாற்றாக, வெளிர் நிறங்கள் கொண்ட ஆடையை அணியும்போது, அவை சூரிய ஒளியை உடலில் படவிடாமல் தடுக்கின்றன.


இதனால், உடலின் இயல்பான குளுமையைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. அது மட்டுமல்ல, இந்த வெளிர் நிறங்கள் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லவை. கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் மற்றும் மன எரிச்சல், குளிர்ச்சியான நிறங்களைக் காணும்போது நீங்குகிறது.


தற்போது பேஸ்டல் நிறங்கள்தான் அதிகம் டிரெண்டில் இருக்கின்றன. இதை ’ஐஸ்க்ரீம் கலர்ஸ்’ என்றும் அழைப்பார்கள். எனவே, பேஸ்டல் நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்தால் சரியாக இருக்கும். மற்றவர்களின் கவனத்தையும் நம் மீது ஈர்க்க முடியும்.

டார்க்காய்ஸ்


நீலம் மற்றும் பச்சையின் கலவைதான் டார்காய்ஸ். இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட நிறங்களுள் இதுவும் ஒன்று. புத்துணர்ச்சி, அமைதி மற்றும் பெண்மை என ஃபேஷன் துறை வல்லுநர்களால் ஆராதிக்கப்படும் நிறம்.


இந்த நிறத்தில் நீங்கள் ஆடை அணிந்து, அதற்கு கான்ட்ராஸ்ட் ஆக வெள்ளை , பீச் போன்ற நிறங்களோடு மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்யலாம்.


தற்போது குவிர்க்கி பிரின்ட் கொண்ட டி-ஷர்ட்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன. குவிர்க்கி பிரின்ட் கொண்ட வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் அதற்கு மேட்சாக டார்க்காய்ஸ் நிற காட்டன் பேன்ட் சிறந்த தேர்வாகும். இதற்கு இணையான ஆக்சஸரீஸாக ஸ்னீக்கர்ஸ் ஷூ, போல்ட் ஸ்ட்ராப் வாட்ச் மற்றும் ஸ்லிங் பேக் அணியலாம்.

கேண்டி பிங்க்


மகிழ்ச்சி மற்றும் குளுமைக்கான அடையாளம் கேண்டி பிங்க். பெரும்பாலும் பெண்களின் விருப்பத் தேர்வும் இந்த நிறம்தான். லிப்ஸ்டிக் தொடங்கி அணியும் ஆடை வரை, இந்த நிறம் இல்லாத இடமே இல்லை. கேண்டி பிங்கில் எந்த வகை ஆடையையும் அணிந்துகொள்ளலாம்.


இருப்பினும் ஆங்க்கிள் லென்த் பேன்ட் அணிந்து, அதற்கு மேட்சாக வெள்ளை, பிங்க் , நீலம் போன்ற நிறங்களில், டாப்ஸ் மற்றும் பெல்ட் அணிந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். ஆக்சஸரியில் பழுப்பு நிற ஷூ அல்லது ஹீல் மற்றும் கழுத்தணி அணியலாம்.

லெமன் யெல்லோ


இந்த நிறம், கோடைக்கு ஏற்ற சரியான தேர்வு. கோடையைக் கொண்டாட வேண்டுமெனில் லெமன் யெல்லோதான் டிசைனர்களின் முதல் சாய்ஸ். பலூன் பேன்ட் என்பது ரெட்ரோ ஸ்டைலாக இருந்தாலும் தற்போது அதுதான் டிரெண்ட். லூஸான ஃபிட் கொண்ட இந்த பேன்ட் கோடைக்கும் ஏற்றது.


இந்த பேன்ட்டை யெல்லோ நிற டாப்போடு மேட்ச் செய்யலாம். லெமன் யெல்லோவிற்கு காம்பினேஷனாக வெள்ளை, மிலிட்டரி கிரீன், சிவப்பு போன்ற நிறங்களைத் தேர்வு செய்யலாம். இதில் எந்த காம்பினேஷனில் உடையணிந்தாலும் இது உங்களை போல்டாக காட்டும்.

பெய்ஜ்


​பழுப்பு நிற குடும்பத்தைச் சேர்ந்ததுதான் பெய்ஜ் நிறம். இந்த நிறத்தைத் தனித்துவமான ஆடைகளை அணிய விரும்புவோர்தான் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிறம் ரிச் லுக்கைத் தரும். இதில் காட்டன் சாரீ, ஹைவே ஸ்கர்ட், லாங் ஸ்கர்ட் போன்றவை அணியலாம்.


இதற்கு காம்பினேஷனாக சாக்லேட் பிரவுன் டாப்ஸ் அல்லது ப்ளவுஸ் பொருத்தமாக இருக்கும். இதற்கு ஃபிளாட் செருப்பு , பூட்ஸ் சாண்டல், ஃபிளாட் ஷூ அணியலாம். பெரிய ஸ்ட்ராப் கொண்ட ப்ரவுன் நிற வாட்ச் மற்றும் பேக் அணியுங்கள்.

Facebook Comments