Menu

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு – நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண யானைக்கல் – பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடையே புதிய மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


நகரில் கோரிப்பாளையம் சந்திப்பை மட்டும் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அழகர்கோவில் ரோடு – ரேஸ்கோர்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து யானைக்கல் வரை இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மேலும் நான்கு வெளி வீதிகளிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.


குறிப்பாக பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து சிம்மக்கல், யானைக்கல் வழியாக கோரிப்பாளையத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் காலை, மாலை பீக் நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.


யானைக்கல்- பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடையே மேம்பாலம் அமைத்தால் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதனால் விரைவாக பயணிக்க முடியும்.


நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலர் முனியசாமி கூறியதாவது: மதுரை கோயில் நகரம் என்பதால் ரோடுகளை விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் இல்லை.


ரேஸ்கோர்ஸ் ரோடு – யானைக்கல் இடையே இரண்டடுக்கு மேம்பாலம், யானைக்கல் – பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடையே 2.30 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.


எனவே மாநில அரசு நகரில் நெரிசலை தவிர்க்க பாலப்பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என்றார்.

Facebook Comments