IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொலை நோக்கத்தோடு பள்ளிக்கு கத்தியுடன் வந்த கணவன்! திருமங்கலம் ஆசிரியை கொலையில் பரபரப்பு தகவல்!!

17


மதுரை அருகே திருமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியரை அவரது கணவனே மாணவர்கள் கண்முண்ணே கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரை மற்றும் சுற்றுவடடாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொலை செய்யும் நோக்கத்துடனே அவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்த தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கொலை செய்யப்பட்ட ரதிதேவிக்கும் குருமுனீஸ்வரனுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் ஹர்ஷவர்த்தினி மற்றும் ஹர்ஷவர்சன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். குருமுனீஸ்வரன் சிவில் இனிஜினியரிங் முடித்து சென்னையில் வேலை பார்த்தார். கணவர் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ரதிதேவி தனது மாமனார் , மாமியாருடன் ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.


விடுமுறையில் சென்னையில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க குருமுனீஸ்வரன் ராமநாதபுரம் வருவது வழக்கம். அப்படி வரும்போது கடந்த ஓராண்டுக்கு முன்பு ரதிதேவிக்கும், குரு முனீஸ்வரன் மற்றும் மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை வந்துள்ளது.


இதைத் தொடர்ந்து ரதிதேவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் காரியாபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அருகில் உள்ள பள்ளியொன்றில் வேலைபார்த்த அவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.


இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு, குருமுனீஸ்வரன் தனது மனைவியை தேடி காரியாபட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னுடன் குடும்ப நடத்துமாறு அழைத்துள்ளார் குருமுனீஸ்வரன். அதற்கு ரதிதேவி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாய்த்தகறாறு அதிகமானது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.


இந்நிலையில்தான் சம்பவம் நடந்த பள்ளிக்கு நேற்று பிற்பகலில் குருமுனீஸ்வரன் வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த அவர், பள்ளி அருகே வண்டியை நிறுத்திவிட்டு வந்து கையில் ஹெல்மெட்டுடன் பள்ளிக்குள் வந்துள்ளார்.


ஆசிரியை ரதிதேவி எங்கே என வாட்ச் மேனிடம் கேட்டு, 3வது மாடியில் 8ம் வகுப்பிற்குச் நேராகச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்தான் மாணவர்கள் கண் முன்னே மிகவும் கொடூரமாக ஆசிரியை ரதிதேவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.


இந்த சம்பவத்தில் போலீசார் குருமுனீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். மனைவி ரதிதேவியை கொலை செய்யும் நோக்கத்துடனேயே அவர் கையில் கத்தியோடு பள்ளிக்கு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


போலீசார் கேட்ட கேள்விகளுக்கு குருமுனீஸ்வரன் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறாராம். குடும்ப பிரச்சனை காரணமாகவும், என்னுடன் ரதிதேவி வர மறுத்ததாலும் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.


இதற்கிடையில் போலீசார் ரதிதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரதிதேவியின் பெற்றோரும் , உறவினர்களும் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ரதிதேவின் 6 வது மகனும், மகளும் தனது தாய்க்கு என்ன நடந்தது என்பது அறியாமல் அம்மா எங்கே ? அம்மாவிற்கு என்ன ஆச்சு ? என கேட்டுக் கொண்டே அழுதனர்.


குழந்தைகளிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் உறவினர்களும் அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. தனது அப்பாவினால் தான் அம்மாவிற்கு இந்த கொடூரம் ஏற்பட்டுள்ளது என்று தெரியாமல் அழும் குழந்தைகளை பார்க்கும் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.