Menu

மேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : சீரியல் துணை நடிகர் மரணம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் சொகுசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் உயிரிழந்தார்.

நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் மதன்ராஜ் என்பவர் நிகழ்விடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

Facebook Comments