Menu

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : விரைவில் அடிக்கல் நாட்டு விழா

மதுரையில் நேற்று பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்த தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழுவின் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு வருகை புரிந்த சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம், குழு உறுப்பினர்கள் சரவணன், மூர்த்தி, சத்யா, பெரிய புள்ளான், பொன்முடி ஆகியோரை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக அரசின் முக்கிய குழுவான தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எயம்ஸ், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

இதற்கான அறிக்கை சமர்ப்பிதற்கான ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அரசுதிட்ட பணிகளை ஆய்வு செய்தோம்.

சில இடங்களில் காலதாமதமாக நடைபெற்று கொண்டிருக்கும் பணிகள் குறித்து காரணங்களை ஆய்வு செய்து குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

நேற்று பல்வேறு தொகுதிகளில் களப்பணி ஆய்வு செய்தது தொடர்பாக 30 துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசித்து வருகிறோம்.

அதில் முக்கிய துறையான வருவாய் துறை, உள்ளாட்சி துறை, சுரங்க துறை அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தும் விவாதிக்கப்பட்டது.

மதுரை அரசு சட்டகல்லூரியில் புதிய குளிரூட்டப்பட்ட நூலகம், கலையரங்கம் ஆகியவை ஆய்வு செய்தோம்.

வேளாண்மை துறையில் பொருள்களை மூன்று மாதங்களுக்கு மேல் வைக்கக் கூடிய குளிரூட்டப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தோம்.

பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள துணைக்கோள் நகரத்திற்கான பணிகள் குறித்தும்

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.

 

Facebook Comments