Menu

கட்டுமானப் பொருட்களுக்கு அரசு புதிய விலை நிர்ணயம்


தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களுக்கு புதிய விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதனை கட்டுமானத்துறையினர் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.


கடந்தாண்டு, ஜூனில் அரசு கட்டுமானப் பொருட்களுக்கான விலைப் பட்டியலை அரசு அறிவித்திருந்தது. இதுவரை அந்த விலைகளே அமலில் இருந்தன. இந்த நிலையில் அரசின் சார்பில் புதிய கட்டுமானப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, ஒரு மெட்ரிக் டன் சிமென்ட் 5 ஆயிரத்தி 750 ரூபாய், 1000 செங்கல்கள் விலை 7 ஆயிரத்தி 435 ரூபாய், எம்.சாண்ட் என்னும் செயற்கை மணலின் விலை ஒரு மெட்ரிக் டன் ஆயிரத்தி 250 ரூபாயாகவும் அரசு நிர்ணயித்துள்ளது.


கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில், பின்னர் வந்த ஜி.எஸ்.டி., வரியால் குழப்பம் ஏற்பட்டது.


எனவே, இந்த முறை ஜி.எஸ்.டி., வரியின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய விலையை கட்டுமானத்துறையினர் பின்பற்றவேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Facebook Comments