Menu

பாயாமல் நின்ற சந்திராயன் 2! இஸ்ரோவிற்கு விஞ்ஞானிகள் பாராட்டு!!


தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 2 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் நேற்று இரவில் விண்ணில் செலுத்த இருந்தநிலையில் திடீரென பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.


இஸ்ரோ நிறுவனம் 2008 -ல் நிலைவை ஆய்வு செய்ய சந்திராயன் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் ஆயூட்காலம் 2009-ல் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் இஸ்ரோ நிறுவனம் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை உருவாக்கியது.


இது நிலவில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மக்கள் வாழ சாதகமான சூழல் , தண்ணீர் உள்ளதா போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது.


சந்திராயன்-2 விண்கலத்தை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 – எம் 1 என்ற ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று நள்ளிரவு 2.51 மணிக்கு விண்ணில் பாய இருந்தது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.


சரியாக கவுண்ட் டவுண் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில் திடீரென இரவு 2.15 மணிக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனை காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்தது.


சரியாக கவுண்ட் டவுண் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில் திடீரென இரவு 2.15 மணிக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனை காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்தது.


இதன்படி சந்திராயன் -2 விண்கலம் நிறுத்தப்பட்டது சரிதான் என இந்திய பாதுகாப்புத்துறையின் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓ.வின் முன்னாள் இயக்குனர் ரவி குப்தா இஸ்ரோவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


ஒருவேளை தொழில்நுட்ப கோளாறுடன் விண்ணில் ஏவப்பட்டிருந்தால் சரி செய்வது சிக்கலானதாக மாறியிருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.


இஸ்ரோவின் இந்த அதிரடி முடிவிற்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞர்னிகள் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments