Menu

இப்படி ஒரு பர்த்டே பார்ட்டியா? அசத்தும் படிக்கட்டுகள்!


படித்து விட்டு வெளியூர்களிலும் , உள்ளூரிலும் வேலைபார்க்கும் இளைஞர்களின் முயற்சியால் மதுரையில் உருவான அமைப்புதான் படிக்கட்டுகள். இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.


தீபாவளியில் தொடங்கி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என எல்லா பண்டியையையும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் உணவு, புத்தாடை வழங்கி கொண்டாடி மகிழும் இந்த இளைஞர் பட்டாளத்தின் ஸ்பெஷல் பர்த் டே பார்ட்டிதான்.


இளைஞர்கள் பார்ட்டி என்றதும் தவறாக எண்ணி விடவேண்டாம். இது வேற லெவல் பார்ட்டி. ஆம்! ஒவ்வொரு மாதமும் ஒரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த விழாவிலேயே ஏராளமான குழந்தைகளுக்கு கேட் வெட்டிக் கொண்டாடுகிறார்கள். இதுநாள் வரையில் மதுரையின் 15 காப்பகங்களுக்கும் மேல் 200க்கும் மேற்பட்ட பிறந்தநாட்கள், அறுசுவை உணவு என கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


இதுபோக படிக்கட்டுகளின் உறுப்பினர்கள், நண்பர்களின் பிறந்த நாளையும் காப்பக குழந்தைகள் குறைந்தபட்சம் 50 பேருக்காவது அறுசுவை உணவு விருந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு தங்கள்து வீட்டுக் குழந்தைகளை காப்பகங்களுக்கே அழைத்து சென்று அங்கு கேக் வெட்டி, சாக்லேட் கொடுத்து, உணவும் பறிமாறியும் மகிழ்கிறார்கள்.


கடந்த இரண்டு வருடமாக படிக்கட்டுகள் நண்பர்கள் ஒவ்வொரு காப்பகங்களுக்கும், அந்தந்த மாதம் பிறந்தாள் நாள் கொண்டாடும் குழந்தைகளுக்காக கேக் வெட்டி,இனிப்புகள் கொடுத்து,உணவு கொடுத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.


இந்த ஜூலை மாதம் மதுரை அழகர்கோயில்ரோடு, கடச்சனேந்தலில் உள்ள ஜோ-ஆண்டிரியா காப்பக குழந்தைகளின் பிறந்தநாளை கடந்த 14.07.2019 அன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது படிக்கட்டுகள்.


படிக்கட்டுகளின் 25வது மாத பிறந்தநாள் கொண்டாட்டமாக அமைந்த இந்த விழாவின் சிறப்பசமாக பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கணித பயிற்சி வகுப்புகள், நோட்ஸ்- கைடுகள் வழங்கும் நிகழ்வு, குழந்தைகளுக்கான ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் குழந்தைகளுக்கு கேக் + பரிசு ஆகியவையும் இடம்பெற்றன என்பது கூடுதல் தகவல். படிக்கட்டுகளின் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பு நண்பர்கள் 9677983570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments