Menu

மதுரையில் தேர்தல் பறக்கும் படை என கூறி ரூ.20 லட்சம் கொள்ளை

மதுரையில் அரசு பேருந்தில் பயணித்த தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறி ஆய்வு செய்து, 20 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் அரண்மனை அருகே உள்ள யூனிவர்சல் என்ற நிதி நிறுவனத்தின் ஊழியர்களான ஆனந்தன் மற்றும் சரவணகுமார் ஆகியோர், மதுரையில் உள்ள கிளைக்கு 20 லட்சம் ரூபாயை அரசு பேருந்தில் எடுத்து சென்றுள்ளனர். மதுரை வரிச்சூர் அருகே பேருந்து வரும் போது காரில் வந்து வழிமறித்த சிலர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறி, பயணிகளிடம் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் இருவரையும் கீழே இறக்கி உரிய ஆவணங்கள் இல்லை என அவர்கள் எடுத்து வந்த 20 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். காரில் அவர்களை சிறுது தூரம் ஏற்றிச் சென்ற அந்த கும்பல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் காண்பித்து விட்டு பணத்தை பெற்று செல்லும் படி கூறி ஏமாற்றி சென்றுள்ளது. இது குறித்து கருப்பாயூரனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments