Menu

மதுரையில் தீ வைக்கப்பட்ட மாணவி இன்று உயிரிழப்பு

ஒரு தலைக்காதலால் 9 வகுப்பு மாணவி சித்ராதேவிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், 12 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி சித்ராதேவி , அச்சம்பட்டி அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை தனது காதலை கூறியும் சித்ராதேவி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பாலமுருகன், தான் கையில் கொண்டு வந்த கேனிலிருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீ பற்றி எரிய, வேதனை தாங்கமுடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார். பாதி உடல் எரிந்த போது, அவ்வழியாக வந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக தீயை அணைத்து, சித்ராதேவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சை பலனின்றி மாணவி சித்ராதேவி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார்.

 

Facebook Comments

ஜூலை 28ம்தேதி மதுரையை கலகலக்க வைக்கப் போறார் எஸ்.வி.சேகர்

மதுரையில் வருகிற 28ம்தேதி (ஞாயிற்றுக்...